2025 மே 20, செவ்வாய்க்கிழமை

அரசியல் பாகுபாடின்றி மீனவர்களுக்கு உதவ வேண்டும்: கடற்றொழிலாளர் சம்மேளனத் தலைவர்கள் கோரிக்கை

Menaka Mookandi   / 2012 ஓகஸ்ட் 27 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரஜனி)

மீனவ சமூகத்திற்கு உதவ முன்வருபவர்கள் அரசியல் தலையீடின்றி உதவ வேண்டும் என கடற்றொழிலாளர் சம்மேளனத் தலைவர்கள் மீனவ சமூகம் சார்பில் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளதாக கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளன தலைவர் எமிலியாம்பிள்ளை இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.

கடற்றொழிலாளர்களின் மாதாந்த கூட்டம் யாழ். பண்ணை நீரியல் வளத்துறை மண்டபத்தில் இன்று காலை நடைபெற்ற போது மீனவர்கள சார்பில் சம்மேளனத் தலைவர்கள் இவ்வாறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். இது தவிர மேலும், 2 அம்ச கோரிக்கைளை முன்வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தீவகப்பகுதி மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் வழங்கப்படவில்லை. இதுவரை காலமும் வழங்கப்படாமைக்கான காரணம் என்ன, தீவக மீனவர்கள் புறக்கணிக்கப்படுகின்றார்களா? என்றும், அபிவிருத்தி திட்டங்கள் வழங்கும் போது அபிவிருத்தி சங்கங்கள் ஊடாக வழங்குமாறும் கோரிக்கைளை  முன்வைத்துள்ளனர்.

அதேவேளை, மீனவர்கள் மீனவ சமூகத்தினர் பல்வேறு நெருக்கடிகளின் மத்தியில் வாழ்கின்றதாகவும், தமக்கு உதவிகள் வழங்கும் போது அரசியல் தலையீடுகளினால் சில உதவிகள் கிடைப்பதில்லை என்றும் மீனவர்கள் சுட்டிக் காட்டியுள்ளதாகவும் சம்மேளனத் தலைவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

சம்மேளனத் தலைவர்களின் கோரிக்கைகளுக்கு மகா சங்க தலைவர் பொன்னம்பலம் பதிலளிக்கையில்,

மண்ணெண்ணெய் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான முறைப்பாடுகளை ஆராய்வதற்கு 4 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், கடற்றொழிலாளரின் மண்ணெண்ணெய் பிரச்சினை தொடர்பாக முதன் முதலாக கடற்றொழில் அமைச்சரை சந்தித்து கலந்துரையாடியுள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, தீவக பகுதி மீனவர்களின் மண்ணெண்ணெய் விடயத்தில், அதிக கவனம் செலுத்துவதாகவும், நியமிக்கப்பட்ட குழுவினர் ஊடாக பிரச்சினைகள் ஆராயப்பட்டு தீர்க்கப்படுமெனவும் கடற்றொழிலாளர் மகா சங்கத் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X