2025 மே 21, புதன்கிழமை

யாழ்.சிறைச்சாலையில் கைதிகள்- உறவினர்கள் சந்திப்பு

Kogilavani   / 2012 செப்டெம்பர் 10 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரஜனி)

கைதிகள் தினத்தை முன்னிட்டு யாழ். சிறைச்சாலையில் உள்ள தண்டணை நிறைவேற்றப்பட்ட கைதிகள் உறவினர்களை சந்திக்கும் நிகழ்வு நேற்று யாழ்.சிறைச்சாலையில் நடைபெற்றது.

யாழ். சிறைச்சாலை அத்தியட்சகர் ஆர்.எம். செனரத் பண்டாரவின் ஏற்பாட்டில் யாழ். சிறைச்சாலை பிரதம சிறைக்காப்பாளர் எஸ்.இந்திரன் மற்றும் சிறைச்சாலை நலன்புரி சங்க செயலாளர் பாலகிருஸ்ணன் சுசிதரன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது, தண்டணை நிறைவேற்றப்பட்ட 20 கைதிகள் தமது பெற்றோர்கள், மனைவி, பிள்ளைகளுடன் கலந்துரையாடவும், அவர்களுடன் உணவு பகிர்ந்து கொள்ளவும் சிறைச்சாலை நிர்வாகம் அனுமதி வழங்கியது.

இதன்போது, 'குடியால் குலைந்த குடும்பம்' என்ற தொனிப்பொருளில் நாடகம் ஒன்று அளிக்கை செய்யப்பட்டது.

இந்நிகழ்வில், யாழ். சிறைச்சாலை நலன்புரி சங்க தலைவி சட்டத்தரணி சாந்தா அபிமன்ன சிங்கம், சட்டத்தரணி குருபரன், அரச சட்டத்தரணி வி.திருக்குமரன், தேவை நாடும் மகளீர் அமைப்பு இணைப்பாளர் சுமதி தனபாலசிங்கம், நலன்புரி சங்க உபதலைவி கே.பொன்னம்பலம், நலன்புரி சங்க உறுப்பினர்கள் மற்றும் கைதிகளின் உறவினர்கள் பலர் கலந்து கொண்டனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X