2025 மே 21, புதன்கிழமை

கட்டிடங்களை கண்டுபிடிக்க அமைச்சர் டக்ளஸ் பணிப்புரை

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 10 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத்)

என்றிப் திட்டத்தின் கீழ் யாழ் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் கட்டப்பட்டுள்ளதாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ள மின்சாரசபைக் கட்டிடம் மற்றும் பொறியிலாளர் அலுவலகம் ஆகியவை எவ்விடத்தில் கட்டப்பட்டுள்ளன என்பது தொடர்பில் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணிப்புரை விடுத்துள்ளார்.

வடமாகாண சபைக்கென இலங்கை மின்சாரசபைக் கட்டிடமும் பொறியியலாளர் கட்டிடமும் 8.32 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டுள்ளதாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளபோதும் குறித்த கட்டிடங்கள் எங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ளன என்று சம்மந்தப்பட்ட அதிகாரிகள் எவருக்கும் தெரியாத நிலையில் கட்டிடம் கட்டி பூரணப்படத்தப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கைப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட மின்சாரசபை உத்தியோகஸ்தரிடம் இது குறித்த கட்டிடத்திற்கான அமைவிடத்தை தெரிவிக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேட்டபோது அதன் அமைவிடம் குறித்து அவர் தனக்கு தெரியாது என்று பதிலளித்தார்.

இது தொடர்பாக மின்சார சபையின் பிராந்திய பிரதிப்பொது முகாமையாளரை தொலைபேசியில் தொடர்புகொண்ட அமைச்சர் மின்சார சபைக்கென கட்டிடம் எங்கு அமைக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பினார்.

அவரும் தனக்கு தெரியாது என்று பதிலளிக்க 8.32 மில்லியன் ரூபா செலவில் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கவனமெடுத்து தனக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணிப்புரை விடுத்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X