2025 மே 21, புதன்கிழமை

'என்றிப்' திட்டத்தில் அமைக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க பணிப்பு

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 10 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                             (எஸ், கே.பிரசாத்)

'என்றிப்' திட்டத்தின் கீழ் யாழ். பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசத்தில் இரு மின்சாரசபைக் கட்டிடங்களும் பொறியிலாளர் அலுவலகமும் அமைக்கப்பட்டுள்ளதாக யாழ். பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில்  அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளபோதிலும், குறித்த கட்டிடங்கள் எங்கு கட்டப்பட்டுள்ளதென்று  அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணிப்புரை விடுத்தார்.

வடக்கு மாகாணசபைக்கென இலங்கை மின்சாரசபைக் கட்டிடமும் பொறியியலாளர் கட்டிடங்கள்  இரண்டும்  8.32 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளதாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட மின்சாரசபை உத்தியோகஸ்தரிடம் குறித்த கட்டிடத்திற்கான அமைவிடத்தை தெரிவிக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேட்டபோது, அந்த அமைவிடம் குறித்து  தனக்கு தெரியாதென்று இவ்உத்தியோகஸ்தர் பதிலளித்தார்.

இது தொடர்பாக  மின்சாரசபையின் பிராந்திய பிரதிப் பொதுமுகாமையாளரை தொலைபேசியில் தொடர்புகொண்ட அமைச்சர், மின்சாரசபைக்கென கட்டிடம்  எங்கு அமைக்கப்பட்டதென கேட்டார். அவர் தனக்கு தெரியாதென பதிலளித்தார். இதனையடுத்து, இது தொடர்பாக கவனமெடுத்து தனக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணிப்புரை விடுத்தார்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X