2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

அசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் பாரபட்சம் இடம்பெறுவதாக முறைப்பாடு செய்தால் நடவடிக்கை: மனித

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 24 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 (எஸ்.கே.பிரசாத்)

அரசியல் கட்சிகளின் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் பொலிஸார் பாரபட்சமான முறையில் செயற்படுகின்றார்கள் என்று மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்படின், இனிவரும் காலத்தில் அவ்வாறு நடைபெறாதவண்ணம் நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்யலாம் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் வடமாகாண ஆணையாளர் இ.ஆனந்தராஜா தெரிவித்துள்ளார்.

யாழ். மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

யாழ்ப்பாணத்தில் சிங்கள கட்சிகள் மற்றும் முஸ்லிம்; கட்சிகள் நடத்துகின்ற ஆர்ப்பாட்டங்களுக்கு பொலிஸார் ஆதரவு வழங்குவதுடன், போக்குவரத்து வழிமுறைகளையும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஏற்றவாறு ஏற்படுத்திக் கொடுப்பதாக சந்திப்பில் கலந்துகொண்டவர்களினால் சுட்டிக்காட்டப்பட்டது.

இதற்கு பதிலளித்த ஆணையாளர் இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றதாக ஆதாரத்துடன் யாழ். மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய காரியாலயத்தில் முறைப்பாடு செய்தால், அது தொடர்பாக எதிர்வரும் காலத்தில் இவ்வாறு நடைபெறாமல் இருப்பதற்கு அரசாங்கத்திடம் பரிந்துரை செய்யலாம் எனவும் குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X