2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

யாழில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டப் பேரணி

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 25 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத், சுமித்தி)


பல்கலைக்கழக விரிவுரையாளர்களினால் கொழும்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் நடைபவணிப் போராட்டத்திற்கு ஆதரவாக யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினால் இன்று யாழ்ப்பாணத்தில் நடைபவணிப் போரட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 9 மணிக்கு பருத்தித்துறையில் இருந்து அரம்பித்த இந்த பேரணி, நெல்லியடி, அச்சுவெலி, கோப்பாய், நல்லூர் மற்றும் யாழ். நகர் ஊடாக மதியம் 1.30 மணியளவில் யாழ் பல்கலைக்கழத்தை வந்தடைந்தது.

இந்த போராட்டம் தொடர்பாக யாழ். பல்கலைக்கழத்தின் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் இராயகுமாரன் தமிழ்மிரருக்கு தெரிவிக்கையில்,

'பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் கோரிக்கையை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி, தெனிலங்கையில் இருந்து பல்கலைக்கழக ஆசிரியர்களும், கண்டியில் இருந்து பல்கலைக்கழக மாணவர்களும் நடைபயணப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இப்பேரணிகள் எதிர்வரும் 26ஆம் திகதி கொழும்பை வந்தடையவுள்ளன. இந்த போராட்டத்திற்கு ஆதரவாக வடபகுதியில் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்களினால் பருத்தித்துறை இருந்து யாழ்ப்பாணம் வரை நடைபவனிப் போரட்டம் முன்னெடுக்கப்பட்டது.

எமது கோரிக்கைகளை அரசு உடன் ஏற்றுக்கொண்டு அதற்குரிய தீர்வை வழங்க முன்வர வேண்டும். அவ்வாறு தவறும் பட்சத்தில் இதைவிட வலுவான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவாக தென்னிலங்கையில் பல்வேறு தரப்பின்ர் ஆதரவு வழங்கி வருகின்றனர். அதேபோன்று நாமும் பல்வேறு தரப்பினரிடம் ஆதரவு திரட்டுவதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றோம்' என்று அவர் குறிப்பிட்டார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X