2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

விசேட தேவையுடைய மாணவர்களுக்கான பயிற்சி பட்டறை

Kogilavani   / 2012 ஒக்டோபர் 05 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சுமித்தி)
விசேட தேவையுடைய மாணவர்களை மேம்படுத்தி சமூகத்துடன் இணைத்துக் கொள்வதற்கான விசேட பயிற்சி பட்டறை இன்று காலை யாழ்.திருமறைக்கலாமன்ற கலைத்தூது கலையகத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

திடோரா யதார்த்த நிறுவனத்தின் தலைவர் ரோஹண தேவ தலைமையில், நடைபெற்ற பயிற்சி பட்டறையில்,  இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் எஸ்.மகாலிங்கம் கலந்துகொண்டு பயிற்சி பட்டறையை ஆரம்பித்து வைத்தார்.

இதேவேளை, யாழ். வலிகாமம் கல்வி வலய விஷேட தேவையுடைய மாணவர்கள், சிவபூமி மனவிருத்தி இல்லம், உடுவில் எ.ஆர்.கே. உளவிருத்தி பாடசாலை ஆகியவற்றின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் என 150ற்கும் மேற்பட்டோர் இப்பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டனர்.

விசேட தேவையுடைய சிறுவர்களின் எதிர்கால தேவைகள் மற்றும் கற்றல் செயற்பாடுகளை பயிற்றுவிப்பது தொடர்பாக ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கும் நோக்கத்துடன் இப்பயிற்சி பட்டறை ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிகழ்வில், இந்திய வைத்தியர் யூரி பேட், திடோரா யதார்த்த நிறவனத்தின் தலைவர் ரோஹண தேவ துணைவியார் ரமணி தமயந்தி, திருமறைக்கலாமன்ற உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X