2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

இடைத்தரகர்கள் மூலம் சேவையைப் பெறுவதைத் தவிர்க்குமாறு யாழ்.அரச அதிபர் கோரிக்கை

Kogilavani   / 2012 ஒக்டோபர் 06 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                           (எஸ்.கே.பிரசாத்)
யாழ்.மாவட்டச் செயலகத்தில் மக்கள் நேரடியாக தமது தேவைகளை பூர்த்தி செய்ய முடியும் என்றும் இடைத்தரகர்கள் மூலம் சேவையைப் பெறுவதைத் தவிர்க்குமாறு யாழ்.அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்.மாவட்டச் செயலத்தில் பிரஜைகள் பட்டயம் அமைக்கப்பட்டுள்ளதால் பொது மக்கள் தமது சேவைகளை இடைத்தரகர்கள் இன்றி செய்தகொள்ள முடியும்.

பொதுமக்களின் வேலைகளை இலகுபடுத்துவதற்கு ஏற்ற வகையில் மாவட்டச் செயலகத்தில் போதியளவு ஆளனி வளம் அமைக்கப்பட்டுள்ளது. இடைத்தரகர்கள் மூலம் தேவைகளை பெற்றுக்கொள்ளும்போது பொதுமக்கள் பெரும் நெருக்கடிகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது.
திங்கள் புதன் ஆகிய தினங்களில் யாழ்.மாவட்டச் செயலகத்தை விட இடைத்தரகக்களிடமே அதிக மக்கள் காணப்படுகின்றனர். இதனால் பொதுமக்கள் இலகுவாக பெறக் கூடிய சேவைக்கும் பணத்தைச் செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பொலிஸார் மூலம் இந்த நடவடிக்கை கட்டுப்படுத்த முயற்சித்தபோது அது பயனழிக்கவில்லை. இதனால் மாவட்டச் செயலகத்தினுள் இன்று சனிக்கிழமை தொடக்கம் பிரஜைகள் பட்டயம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பொது மக்கள் தங்கள் சேவையை பெற்றுக்கொள்ள முடியும்.

அத்துடன் மாவட்டச் செயலகத்தில் தமது சேவைகளை பெற்றுக்கொள்ள வரும் மக்கள் தங்கள் சம்மந்தப்பட்ட அதிகாரி  தொடர்பான விளக்கங்களை வரவேற்பாளரிடம் பெற்றுக்கொள்ளலாம்.

சம்மந்தப்பட்ட அதிகாரி  பொதுமக்களின் தேவைகுறித்து கவனம் எடுக்காத பட்சத்தில் நேரடியாக தன்னுடன் தொடர்புகொள்ளலாம்'  என அரச அதிபர் மேலும்  தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X