2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

தவிசாளர் மீது தாக்குதலுக்கு வலி. கிழக்கு பிரதேச சபை கண்டனம்

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 16 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத்)

நல்லூர் பிரதேச சபைத் தவிசாளர் ப.வசந்தகுமார் மீது இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட தாக்கதலுக்கு வலிகாமம் கிழக்கு பிரதேச சபை கண்டனம் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தலைவர் அ.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'கடந்த 14ஆம் திகதியன்று நல்லூர் பிரதேச சபைத் தவிசாளர் ப.வசந்தகுமார்; தாக்கப்பட்டமையானது ஜனநாயக உரிமைகளை மீறும் செயற்பாடாகும்.

தற்போது அரசாங்கத்தினால் வடபகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தமிழர்களின் காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கைகளை தட்டிக்கேட்ட இவர் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலானது தமிழர்களின் உரிமைகளை அடக்கும் ஈனத்தனமான செயற்பாடகும்.
 
ஜனநாயக முறையில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சபைகளின் தவிசாளர்கள், தமது மக்களுக்கான அபிவிருத்திப் பணிகளையும், சேவைகளையும் சுதந்திரமாக மேற்கொள்வதற்கு அரசு தரப்பினரும், அவர்களுடன் இணைந்து செயற்படும் தரப்பினரும் அச்சுறுத்தலாகவும், அவர்களின் சேவைகளை முடக்கும் வகையில் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

இவ்வாறான செயற்பாடுகளின் பிண்ணனியில் தான் நல்லூர் பிரதேச சபைத் தவிசாளர் தாக்கப்பட்டுள்ளார். இவர் மீதான தாக்குதலை வலிகாமம் கிழக்கு பிரதேச சபை உறுப்பினர்களாகிய நாம் வன்மையாகக் கண்டிப்பதோடு இந்த தாக்குதலை கண்டித்து எதிர்வரும் 22ஆம் திகதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு சபை உறுப்பினர்களால் சபை புறக்கணிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளோம்' என்றும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X