2025 ஜூன் 21, சனிக்கிழமை

முள்ளிவாய்க்காலில் ஆயுதங்கள் மீட்பு

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 19 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

(த.சுமித்தி)

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பகுதியில் விடுதலை புலிகள் உபயோகப்படுத்தியதாகக் கூறப்படும் ஆயுதங்கள் சிலவற்றை பாதுகாப்பு தரப்பினர் மீட்டுள்ளனர் என்று யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் எரிக் பெரேரா இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

முல்லைத்தீவு பிரதேச புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பட்ட தகவலின்படி முல்லைத்தீவு பொலிஸாரினால் குறித்த ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கடந்த வாரத்தில் மீட்கப்பட்டுள்ளதாக அவர் மேலும்; தெரிவித்தார்.

எல்.எம்.ஜி துப்பாக்கி 2, 97 பிரிவு துப்பாக்கி 4, ரி.56 ரக துப்பாக்கி 08, ரி.56 ரக துப்பாக்கி படகு 11, ஆர்;.வி.ஜி. 02, 60 மில்லி கிராம் துப்பாக்கி குண்டு 10, ரி.56 ரக ரவைகள் 2000, எம்.பி.என்.ஜி, ரவைகள் 50, ரி.56 பற்றி 01, கிளைமோர் குண்டு 02, 130 மில்லி கிராம் துப்பாக்கி ரவை 01, விமானக் குண்டு 01, சிறிய பற்றி 01, ஜ.வி.ஜி. குண்டு 03, ஆர்.வி.ஜி. குண்டுகள் 4, போன்ற ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மேலும்; தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .