2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

யாழ். பல்கலை நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்க திங்களன்று விசேட கூட்டம்

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 28 , பி.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விரிவுரைகளை மாணவர்கள் பகிஷ்கரித்துள்ள நிலையில், பல்கலைக்கழக நடவடிக்கைகளின் முன்னெடுப்புக்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கான விசேட கூட்டமொன்று எதிர்வரும் திங்கட்கிழமை நடத்த பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது.

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் சக மாணவர்கள் நால்வர் கைது செய்யப்பட்டு வெலிகந்த புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே மாணவர்கள் இந்த பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மாணவர்கள் விரிவுரைகளை பகிஷ்கரித்துள்ள போதிலும் பல்கலைக்கழக நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும், மாணவர்களின் போராட்டம் தொடர்பில் கலந்துரையாடி தீர்மானமொன்றுக்கு வரும் வகையிலேயே எதிர்வரும் 31ஆம் திகதி திங்கட்கிழமை மேற்படி விசேட கூட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் பல்கலை நிர்வாகப்பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X