2025 ஜூன் 18, புதன்கிழமை

செய்தியாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: சிவாஜிலிங்கம்

Menaka Mookandi   / 2013 மார்ச் 14 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

'யாழ். மாவட்டத்தில் தொடாச்சியாக செய்தியாளர்கள் தாக்கப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க அரசாங்கம் முன்வரவேண்டும்' என தமிழர் விடுதலை இயக்க (ரெலோ) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

இந்த வருடத்தில் மட்டும் தொடர்ச்சியாக 4 செய்தியாளர்கள் தாக்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறு செய்தியாளர்கள் தாக்கப்படுவதனால் யாழ்ப்பாணத்தில் பத்திரிகை சுதந்திரம் அழிந்து போகின்றது. பத்திரிகை சுதந்திரத்தினை கட்டி எழுப்பவும், சமாதானத்தினை ஏற்படுத்தவும், அரசாங்கம் முன்வந்து தாக்குதல் சூத்திரதாரிகளை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யாது அரசாங்கம் பொறுப்பற்ற முறையில் இருப்பதனால் மேலும் செய்தியாளர்கள் தாக்கப்படுவதுடன், ஊடக சுதந்திரமும் அழிந்து விடும்' என்றும் அவர் குறிப்பிட்டார்.

'செய்தியாளர்கள் மீதான தாக்குதல்களுக்கும், ஊடக சுதந்திரத்தினை நிலை நிறுத்தவும், அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். செய்தியாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்' என்றும் அவர் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .