2025 ஜூன் 18, புதன்கிழமை

யாழ். முஸ்லிம் வர்த்தக சங்கம் அங்குரார்ப்பணம்

Kogilavani   / 2013 ஏப்ரல் 01 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். முஸ்லிம் வர்த்தகர்களுக்கான வர்த்தக சங்க அங்குரார்ப்பணமும் பொது கூட்டமும் யாழ்.ஒஸ்மானியா கல்லூரியில் நடைபெற்றது.

யாழ். முஸ்லிம் வர்த்தகர்களின் ஏற்பாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வில், யாழ் மற்றும் கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளன தலைவர் எச்.எம்.நிலாம், லாபீர் , நாவாந்துறை பள்ளி  மௌலவி முஹமட் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

யாழ். முஸ்லிம் வர்த்தகர்கள் வர்த்தக நடவடிக்கைகளின் எதிர்கொள்கின்ற பல்வேறு பிரச்சினைகளை தீர்;க்கும் நோக்கத்துடனும் தமது வர்த்தக சமூகத்தினை பாதுகாக்கும்; நோக்குடனும் வர்த்தக சங்கம் அமைப்பதற்கான அங்குரார்ப்பண பொதுக்கூட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
இக்கூட்டத்தின்போது தற்காலிகமாக 13 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

யாழ். முஸ்லிம் வர்த்தக சங்கத்தின் முதலாவது கூட்டம் எதிர்வரும் 15 ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் அங்;கத்துவர்களை தெரிவு செய்வதென வர்த்தகர்களினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ். முஸ்லிம்களினால் முதன் முதலாக இந்த வர்த்தக சங்கம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளதென்பதும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .