2025 ஜூன் 18, புதன்கிழமை

தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் அகற்றப்பட்டது

Freelancer   / 2025 ஜூன் 17 , பி.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஈரானின் தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தை அகற்றி, வேறு ஒரு இடத்திலிருந்து அதன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். 

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் ஒருவரின் நிலை மோசமாக உள்ளதுடன், மற்றைய மூவரின் நிலை மோசமாக இல்லை என்றும் கூறப்படுகிறது. 

இருப்பினும், காயமடைந்த அனைவரும் இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்கள் என்பதுடன், அவர்கள் தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை ஆராய தூதரகம் தலையிட்டு வருகிறது என்றும் அமைச்சர் கூறினார்.  R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .