2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

சமுர்த்தி ஆளணி பற்றாக்குறை விரைவில் நிவர்த்தி செய்யப்படும்: அமைச்சர் டக்ளஸ்

Super User   / 2013 ஏப்ரல் 02 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ரூபன்

யாழ். மாவட்ட சமுர்த்தி சங்கங்களில் தற்போது நிலவி வரும் உத்தியோகத்தர் பற்றாக்குறை விரைவில் நிவர்த்தி செய்யப்படும் என பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ். பிரதேச செயலகத்தில் இன்று இடம்பெற்ற யாழ். மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் போக்குவரத்துகள் இலகுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக தீவகப் பகுதிக்கான சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் போக்குவரத்துகள் இலகுபடுத்தப்படுவதுடன் புதிய நியமனத்தின் போதும், இடமாற்றத்தின் போதும் உத்தியோகத்தர்களின் தேவைக்கேற்ப நியமனங்கள் வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X