2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

நலன்புரி முகாமிலுள்ள வலி. வடக்கு மக்கள் புயலால் பாதிப்பு

Menaka Mookandi   / 2013 மே 13 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

மல்லாகம், கோணப்புலம் நலன்புரி நிலையத்தில் வசிக்கும் வலிகாமம் வடக்கு பிரதேச மக்கள்;, தங்களை உடனடியாக மீள்குடியேற்றுமாறு கோரி, தெல்லிப்பழை பிரதேச செயலகத்துக்குச் செல்ல முற்பட்ட போது அவர்களை இராணுவத்தினர் தடுத்து நிறுத்தியதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
 
இன்று திங்கட்கிழமை அதிகாலை வீசிய புயல் காற்றினால் கோணப்புலம் நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ள வலிகாமம் வடக்கைச் சேர்ந்த பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் ஆவேசமடைந்த அம்மக்கள், சொந்த இடங்களில் தங்களை உடனடியாக மீள்குடியேற்றம் செய்யவேண்டும் என்று வலியுறுத்தும் வகையில் பிரதேச செயலத்திற்கு செல்ல முயற்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அம்மக்களை தடுத்து நிறுத்தியுள்ள இராணுவத்தினர், 'இது ஒரு சிறிய விடயம் என்றும் இது தொடர்பில் யாழ். கட்டளைத் தளபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதுடன் இவ்விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் இதனை ஏற்றுக்கொள்ளாத பொதுமக்கள், 'இங்கு 240ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தொடர்ச்சியாக இயற்கை அனர்த்தங்களினால் நாங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றோம்.

கடந்த முறை வீசிய நிசாப் புயலினால் இதைவிட பாரிய பாதிப்புக்களை நாங்கள் எதிர்நோக்கினோம்' என்று எடுத்துரைத்துள்ளனர். அத்துடன், 'தொடர்ச்சியாக இவ்வாறான துன்பங்களை எதிர்நோக்க முடியாது என்று மக்கள் பிரதிநிதிகள் தெரிவித்தனர். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .