2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

புங்குடுதீவில் உப தபாலகம் திறப்பு

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 06 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


யாழ். புங்குடுதீவு இறுப்பிட்டிப் பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட உப தபாலகம் நேற்று சனிக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கான பிரதித் தபால் மா அதிபர் என்.இரட்ணசிங்கம் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு புதிய தபாலகத்தை திறந்துவைத்தார்.

புங்குடுதீவு தபால் அதிபர் திருமதி சுமித்திரவதி தபோதரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில்  வேலணைப் பிரதேச செயலர் மஞ்சுளாதேவி சதீசன், யாழ் பல்கலைக்கழக புவியியல்துறை பேராசிரியர் கா.குகபாலன், வேலணை பிரதேச சபை தவிசாளர் சி.தவராசா, தபால் திணைக்கள அதிகாரிகள், ஊழியர்கள் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .