2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

ரி.ஜ.டி.யினரால் கைது செய்யப்பட்ட இருவர் விடுதலை

Super User   / 2013 ஒக்டோபர் 10 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

பயங்கரவாத புலனாய் பிரிவினரால் கைது செய்யப்பட்ட இருவர் யாழ். நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மானிப்பாய் பொலிஸ் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இவர்கள் இருவரும் பயங்கரவாத புலனாய் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும்  யாழ். நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படடனர். இதன்போதே இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஆனைக்கோட்டையில் வீதி ரோந்து சென்ற மானிப்பாய் பொலிஸ் மீது கடந்த புதன்கிழமை இரவு வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் கடந்த வெள்ளிக்கிழமை எட்டு பேர் கைது செய்யப்பட்டு அன்றைய தினமே பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து பயங்கரவாத குற்றத்தடுப்புப் புலனாய்வு பிரிவினரால் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை கோண்டாவில் பகுதியினைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர். தொடர்ந்து நேற்று புதன்கிழமை சுன்னாகம், உடுவில் பகுதியினைச் சேர்ந்த ஆறு பேர் சுன்னாகம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைகளின் பின்னர் யாழ். நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு  விடுதலை செய்யப்பட்டனர்.இதேவேளை, சுன்னாகம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட ஆறு பேரும் தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .