2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

முக்குறுணிப் பிள்ளையாரின் அங்கிகள் திருட்டு

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 20 , மு.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன்

யாழ். கல்வியங்காடு முக்குறுணிப் பிள்ளையார் கோவிலின் மூலஸ்தான விக்கிரகத்தின் அங்கிகள் நேற்று சனிக்கிழமை இரவு  திருடப்பட்டுள்ளன.

மேற்படி ஆலயத்தின் கூரையைப் பிரித்துக்கொண்டு உள்நுழைந்த திருடர்கள், 2.5 இலட்சம் ரூபா பெறுமதியான அங்கிகளை திருடிச் சென்றுள்ளதாக மேற்படி  ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .