2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

வடமாகாண வர்ண இரவுகள் நிகழ்வு

Menaka Mookandi   / 2013 நவம்பர் 26 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டு வருடா வருடம் நடத்தப்படும் வர்ண இரவுகள் நிகழ்வுகள் நாளை மறுதினம் வியாழக்கிழமை (28) இரவு நடைபெறவுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த வர்ண இரவுகள் நிகழ்வுகளின் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி கலந்துகொண்டிருந்தார். எனினும் வடமாகாண சபை பொறுப்பேற்ற பின்னர் நடைபெறும் இந்த வருட வர்ண இரவுகள் நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்துகொள்ளவுள்ளார்.

இந்நிகழ்வில் தேசிய மட்டப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டிய வடமாகாண பாடசாலைகளின் விளையாட்டு வீரர்கள் மற்றும் திறந்த போட்டிகளில் வெற்றீட்டிய கழகங்களின் வீரர்கள் ஆகியோர் கௌரவிக்கப்படவுள்ளனர்.

இவ்வருடம் தேசிய மட்டப் போட்டிகளில் பாடசாலை மட்டம் சார்பாக 40 பதக்கங்களும், திறந்த போட்டிகளில் 10 பதக்கங்களும் கிடைத்துள்ளன. இது கடந்த வருடங்களினை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X