2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

முதலமைச்சருக்கு அனுமதி மறுப்பு

Super User   / 2013 நவம்பர் 29 , மு.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்கு நேற்று வியாழக்கிழமை மாலை சென்ற வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் இராணுவத்தினரால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

வலிகாமம் வடக்கிலுள்ள உள்ள பொதுமக்களின் காணிகள்  படைத்தரப்பால் அபகரிக்கப்பட்டு அங்குள்ள வீடுகள், கோயில்கள் மற்றும் பாடசாலைகள் ஆகியன படையினரால் உடைக்கப்படுகின்றன.இந்த நிலவரங்களை பார்வையிடுவதற்கு குறித்த பகுதிக்கு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் சென்றுள்ளார்.

எனினும் அவர் உள்ளே செல்ல அனுமதிக்காமல் படைத்தரப்பு அவரை திருப்பி அனுப்பியுள்ளதாக முதலமைச்சரின் பிரத்தியேக செயலாளர் தெரிவித்தார்.முதலமைச்சரை மாவிட்டபுரம் பகுதியில் மறித்த பாதுகாப்பு படையினர்,  உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் செல்வது என்றால் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

அவ்வாறு அனுமதி இல்லாவிட்டால் உள்ளே செல்ல அனுமதிக்கப்படமாட்டாது எனவும் படைத்தரப்பினர் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0

  • T.vigneswaran Friday, 29 November 2013 03:20 AM

    தயவு செய்து இராஜினாமா செய்யவும்...

    Reply : 0       0

    VALLARASU.COM Friday, 29 November 2013 03:20 PM

    ஒரு மகாணத்தின் முதல் அமைச்சர் என்பது அந்த மாகாணத்தின் ஜனாதிபதி. ஆனால் இங்கே...

    Reply : 0       0

    Sumathy M Friday, 29 November 2013 05:59 PM

    கேவலம், இராணுவத்தை வெளியேற்ற போவதாக வீர வசனம் பேசியவரையே இராணுவம் வெளியேற்றி விட்டது...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .