2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

யாழ்.தமிழ் சங்கத்தின் இணையத்தள அறிமுக விழாவும் பாரதி விழாவும்

Kogilavani   / 2013 டிசெம்பர் 12 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.குகன்


யாழ்.தமிழ்ச் சங்க இணையத்தளத்தின் அறிமுக நிகழ்வும் பாரதி விழாவும்; யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் புதன்கிழமை (11) நடைபெற்றன.

யாழ்.தமிழ்ச் சங்கத்தின் உபதலைவர் பேராசிரியர் மா.சின்னத்தம்பி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு கிருபா லேணேர்ஸ் உரிமையாளர் அ.கிருபாகரன், திருநெல்வேலி தேனு களஞ்சிய உரிமையாளர் தி.ஸ்ரீமோகனராஸ் ஆகியோர் அனுசரணைகளை வழங்கினர்.

இந்நிகழ்விற்கான வரவேற்புரையினை யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் சுகந்தினி ஸ்ரீ முரளிதரனும் தொடக்கவுரையினை யாழ்.தமிழ்ச்சங்கத்தின் தலைவரும் யாழ்.பல்கலைக்கழக பேராசிரியருமான தி.வேல்நம்பியும் வாழ்த்துரையினை யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணமும்; வழங்கினர்.

இதன்போது, தமிழ்ச்சங்கத்தின் றறற.வாயஅடைளயபெயஅ.ழசப  இணையத்தளத்தினை யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் உத்தியோகபூர்வமான ஆரம்பித்து வைத்தார்.

தொடர்ந்து இணையத்தளத்தை வடிவமைத்த தங்கராஜா தவரூபனுக்கு கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், 'பாரதி யார்?' என்ற தலைப்பில் யாழ்.பல்கலைக்கழக பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜாவின் சிறப்புரையும் யாழ். பல்கலைக்கழக இசைத்துறைத் தலைவர் கலாநிதி ஸ்ரீ.தர்ஷனனின் குரலிசையுடன் இராமநாதன் நுண்கலைத்துறை மாணவர்கள் இணைந்து வழங்கிய 'புதுமைப்பெண்கள்' என்ற தொனிப்பொருளிலான நாட்டிய நாடகமும் யாழ்.முன்னணிக் கலைஞர்களின் 'நல்லதோர் வீணை' என்ற தொனிப்பொருளிலான பாரதி பாடல்கள் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன.

பாரதி பிறந்த நாளான்று இந்நிகழ்வுகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.




  Comments - 0

  • மகா Friday, 13 December 2013 03:02 AM

    1990 களில் மட்டக்களப்பில் மட்டக்களப்பு வாசகர் வட்டம் ”பாரதி யார்?” என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கை நடாத்தியபோது, பாரதியை யார் என்று கேட்பதா என்று எழுப்பப்பட்ட ஆட்சேபணை ஞாபகத்துக்கு வருகிறது!!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .