2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு சீருடை வழங்க நடவடிக்கை

Super User   / 2013 டிசெம்பர் 12 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன்

வட மாகாணத்திலுள்ள ஆட்டோ சாரதிகளுக்கு சீருடை வழங்க வேண்டும் என மாகாண சபையில் பரிந்துரையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த பரிந்துரை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் கந்தையா சர்வேஸ்வரனால் முன்வைக்கப்பட்டுள்ளது.

வட மாகாண வரவு - செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதம் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது. இதன்போது மாகாண சபை உறுப்பினர் கந்தையா சர்வேஸ்வரனினால் குறித்த பரிந்துரை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த சீருடையில் சாரதியின் பெயர் மற்றும் அடையாள அட்டை இலக்கம் ஆகியன பொறிக்கப்பட்ட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த சீருடை வழங்கும் நடவடிக்கை ஜனவரி முதலாம் திகதியிலிருந்த அமுல்படுத்தப்படும் என வட மாகண போக்குவரத்து அமைச்சர் பீ.டெனீஸ்வரன் இதற்கு பதிலளித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .