2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

கசிப்பு விற்றவருக்கு அபராதம்

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 17 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கிருஷ்ணன்

நீதிமன்ற எச்சரிகையினையும் மீறி கசிப்பு விற்பனை செய்த நபருக்கு சாவகச்சேரி நீதிமன்ற நீதிபதி ஒரு இலட்சத்து 80 ஆயிரம் ரூபா அபராதம் விதித்துள்ளார்.

யாழ். கொடிகாமம், எருவன் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கசிப்பு விற்பனையில் செய்துகொண்டிருந்தபோது கொடிகாமம் பொலிஸரால் நேற்று (16) கைது செய்யப்பட்டு சாவகச்சேரி நீதிமன்றத்தில் இன்று (17) ஆஜர்படுத்தப்பட்டார்.

மேற்படி நபர் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஏற்கனவே நீதிமன்றத்தில் அபராதம் அறவிடப்பட்டு எச்சரிக்கை செய்திருந்தும், மீண்டும் இவ்வாறு செய்தமையினால் அதிகபட்சத் தண்டப்பணமாக 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாவை நீதிபதி விதித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .