2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

இரத்தப் பரிசோதனைக்கு வந்த வயோதிபப் பெண்ணின் தங்கநகைகள் அபகரிப்பு

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 19 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா

இரத்தப் பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு வந்த வயோதிபப் பெண்ணொருவரின் தங்கநகைகளை வைத்தியசாலை ஊழியர்ரென தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட ஒருவர் அபகரித்துச்சென்றுள்ளார்.

தீவுப்பகுதியிலிருந்து வந்த வயோதிபப் பெண்ணொருவரின்  6 பவுண் தங்கநகைகளே இவ்வாறு அபகரித்துச்செல்லப்பட்டுள்ளன.

யாழ். போதனா வைத்தியசாலைக்கு இன்று வியாழக்கிழமை  காலை இரத்தப் பரிசோதனைக்காக மேற்படி வயோதிபப் பெண் வந்துள்ளார். இந்நிலையில், மேற்படி வயோதிபப் பெண் இரத்தப் பரிசோதனை செய்வதற்கு செல்லத் தயாரானபோது அவரின் தங்கநகைகளை தான் வைத்திருப்பதாக தன்னை வைத்தியசாலை ஊழியரென அறிமுகப்படுத்திக்கொண்ட ஒருவர் கூறியுள்ளார்.

இதனை நம்பி தனது  தங்கநகைகளைக் கொடுத்துவிட்டு இரத்தப் பரிசோதனை செய்துவிட்டு திரும்பிவந்த வயோதிபப் பெண், அந்த நபரைக் காணாது திகைத்து  நின்றார். இதனைத் தொடர்ந்து மேற்படி வயோதிபப் பெண்ணின் தங்கநகைகளை குறித்த நபர் அபகரித்துச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .