2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

வலி. கிழக்கு பிரதேச சபையின் வரவு– செலவுத் திட்டம் இன்று சமர்ப்பிக்கப்படாது

Super User   / 2013 டிசெம்பர் 19 , மு.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

வலி. கிழக்கு பிரதேச சபையின் 2014ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டம் இன்றைய கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படமாட்டாது என தவிசாளர் அ.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"2014ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தில் செயலாளரின் கடமைகளை கவனிப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்த உத்தியோகத்தரான ஜெயந்தா சோமராஜ் எம்முடன் இணைந்து செயற்படுவதில்லை.அவர் வரவு செலவுத்திட்டத்திற்கான விபரங்கள் அனைத்தையும் தன்வசப்படுத்தி வைத்திருத்திருக்கின்றார்.

அத்துடன், எனது அறிவுறுத்தலுக்கு அமைவாக தயாரிக்கின்ற விபரங்களை எனக்கு சமர்ப்பிக்காமலும் காலம் தாழ்த்தி வருகின்றார். இதனால் இன்றைய கூட்டத்தில் வரவு-செலவுத் திட்டம் சமர்ப்பிக்க முடியவில்லை. எனினும் 2014ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டம் இம்மாத இறுதிக்குள் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்படும்.

வரவு-செலவுத் திட்டம் சமர்ப்பிக்க முடியாததிற்கான காரணங்களை விளக்கி வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு கடிதமொன்று அனுப்பி வைத்துள்ளோம். இந்த நிலையில் சபையின் மாதாந்தக் கூட்டத் தொடர் வழமையான நிகழ்ச்சித் நிகழ்ச்சி நிரலின் படி இடம்பெறும்" என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .