2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

கருத்தடை செய்து மரணமான பெண் தொடர்பாக நீதியான விசாரணை வேண்டும்

Super User   / 2013 டிசெம்பர் 20 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

கருத்தடை செய்யப்பட்ட போது மரணித்த பெண் தொடர்பாக நீதியான விசாரணை வேண்டும் என யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்குதல் செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மலையாள்புரம் பகுதியில் அண்மையில் கருத்தடை செய்யப்பட்டதன் பின்னர் மரணமடைந்திருந்த சதீஸ் மஞ்சுளாவின் மரணம் தொடர்பாகவே நீதியான விசாரணை வேண்டும் என்றே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் இல்லத்தினைச் சேர்ந்த சிரேஸ்ட சட்டத்தரணிகளான ஸ்ரீசிவாயா, ப.குகணேஸ்வரன், திருமதி ம.ரசிதா ஆகியோர் இந்த வழக்கினைத் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு எதிர்வரும் 24ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என இதன்போது நீதிபதி உத்தரவிட்டுள்ளார் என சட்டத்தரணி ப.குகணேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .