2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

இந்திய இளைஞர்கள் இருவர் கைது

Super User   / 2013 டிசெம்பர் 24 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

இந்தியாவைச் சேர்ந்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் இன்று தெரிவித்தனர்.சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றசாட்டின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயதான நடராஜன் நாச்சிமுத்து மற்றும் 27 வயதான பழனிச்சாமி ஆனந்தபாகு ஆகியோரே  நேற்று திங்கட்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் யாழ். கல்வியங்;காடு பகுதியில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .