2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

பருத்தித்துறை பிரதேச சபையின் வரவு – செலவுத்திட்டம் நிறைவேற்றம்

Kogilavani   / 2013 டிசெம்பர் 25 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

பருத்தித்துறை பிரதேச சபையின் 2014ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் சபை உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

மேற்படி பிரதேச சபையின் வரவு - செலவுத்திட்டம் செவ்வாய்க்கிழமை (24) சபைத் தவிசாளர் பூபாலசிங்கம் சஞ்சீவனால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதன்போது, ஆளுங்கட்சியில் 7 உறுப்பினர்களும் எதிர்க்கட்சியில் 2 உறுப்பினர்களும் இருந்தனர்.

வரவு - செலவுத்திட்டத்தினை ஆராய்ந்த சபை உறுப்பினர்கள் எவ்விதமான வாதப்பிரதிவாதங்களுமின்றி ஏகமனதாக ஏற்றுக்கொண்டனர்.

மேற்படி வரவு – செலவுத்திட்டத்தினை தமிழத் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் இ.சிவசுப்பிரமணியம் முன்மொழிய தமிழத்; தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் து.வதியழகன் வழிமொழிந்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .