2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

மக்கள் வெற்றியடையவைத்த வல்வெட்டித்துறை நகரசபை வரவு- செலவுத்திட்டம்

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 27 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகரத்தினம் கனகராஜ்

வல்வெட்டித்துறை நகர சபையின் 2014ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் பெரும் இழுபறிக்கு மத்தியில் இரண்டாவது தடவையாக சபையில் இன்று (27) சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக சமர்ப்பிக்கப்பட்ட வரவு - செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்த ஐந்து பேரையும் இன்றைய தினம் பொதுமக்கள் சபைக்குச் செல்லாமல் தடுத்து நிறுத்தி இரண்டாவது தடவையாக சமர்ப்பிக்கப்பட்ட வரவு – செலவுத் திட்டத்தினை வெற்றிபெறச் செய்தனர்.

இந்த நகர சபையின் வரவு – செலவுத் திட்டம் கடந்த 17ஆம் திகதி சபையில் தவிசாளர் என்.அனந்தராஜாவினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. எனினும் சபையிலிருந்த 9 உறுப்பினர்களில் 5 உறுப்பினர்கள் எதிராகவும், 2பேர் ஆதரவாக வாக்களித்தமையினால் வரவு – செலவுத் திட்டம் 3 வாக்குகளால் தோல்வியில் முடிவடைந்தது.

தொடர்ந்து மீண்டும் இன்று (27) தவிசாளரினால் வரவு – செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது. கடந்த வரவு – செலவுத் திட்டத்தில் எதிராக வாக்களித்த தமிழ்த் தேசியக் கூட்;டமைப்பின் ஐந்து உறுப்பினர்களையும் சபை வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் சபைக்குச் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தியிருந்தனர்.

இதன்போது சபையிலிருந்து 4 உறுப்பினர்களும் (தவிசாளர் உட்பட) ஆதரவாக வாக்களிக்க வரவு - செலவுத் திட்டம் நிறைவேறியது. ஆதரவாக வாக்களித்தவர்களில் ஒருவர் ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

  Comments - 0

  • vALLARASU.COM Friday, 27 December 2013 08:32 AM

    'தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா' பவம் அந்த மக்கள் அவர்களின் தலையில் மண்ணை அவர்களே வைத்து விட்டார்கள்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .