2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

அடிப்படை வசதிகள் இன்றி சிரமப்படுவதாக சிறாட்டிக்குளம் மக்கள் விசனம்

Kogilavani   / 2013 டிசெம்பர் 27 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு சிறாட்டிக்குளம் கிராமத்தில் போதிய அடிப்படை வசதிகள் இன்மையால் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள நட்டாங்கண்டல் பிரதான வீதியிலிருந்து சுமார் 8 கிலோமீற்றர் தொலைவில் இக்கிராமம் அமைந்துள்ளது.

இக்கிராமத்திற்கு முறையான போக்குவரத்து மற்றும் மருந்துவ வசதிகள் இன்மையால் அம்மக்கள் பெரிதும் பாதிப்புக்களை எதர்கொண்டு வருகின்றேன். இதேவேளை, தரம் 5 வரையிலான வகுப்புக்களைக் கொண்ட பாடசாலையொன்றே அமைந்துள்ளமையினால், அப்பகுதி மாணவர்கள் தொலைதூரம் சென்றே தமது மேல்நிலைக் கல்வியினை கற்று வருகின்றனர்.  

மிகவும் பின்தங்கிய கிராமமான சிறாட்டிக்குளத்தில் தற்போது 42 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தமது அடிப்படை தேவைகளான மருத்துவ வசதி, போக்குவரத்து வசதி, பாடசாலை மாணவர்கள் மேல்நிலைக் கல்வியை கற்பதற்கான பாடசாலையென்பவற்றை தமது பிரதேசத்திலே ஏற்படுத்தி தரமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிளடம் கோரிக்கை விடுக்கின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .