2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

மானிய உரங்கள் உரிய முறையில் கிடைக்கவில்லை: விவசாயிகள் கவலை

Kogilavani   / 2013 டிசெம்பர் 27 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் காலபோக நெற்செய்கைகளுக்குரிய மானிய உரங்கள் உரிய முறையில் கிடைக்கவில்லையென விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 58 ஆயிரம் ஏக்கர்களுக்குரிய மானிய உரங்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாக கமநல சேவை நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த பகுதியில் தற்போது மானிய உரங்கள் விநியோகப்பட்டு வருகின்றது.

இதில் மாணாவரி நெற்செய்கைகளுக்குரிய உர மானியங்கள் கிடைக்கவில்லை எனவும் இதனை உரிய முறையில் வழங்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர். 

அத்துடன், ஏனைய நீர்ப்பாசன செய்கைகளுக்குரிய அடிக்கட்டு உரங்கள் தற்போது வழங்கப்படுவதனை நிறுத்தியுள்ளார்கள்.

இது விவசாயிகளுக்கு அதிகமாக தேவைப்படும் உரம் என்பதனால் இதனைப் பெற்றுத்தருவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .