2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

யாழில் கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் விற்பனை நிலையம் திறப்பு

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 27 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கீழுள்ள, இலங்கைக் கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் விற்பனை நிலையமான 'கஸ்தூரி பெஷன் ஹவுஸ்' இன்று (27) திறப்பு வைக்கப்பட்டுள்ளது.

யாழ்.கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள இந்நிலையத்தினை பாரம்பரிய மற்றும் சிறுகைத்தொழில் அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா திறந்து வைத்ததுடன் முதலாவது வர்த்தக நடவடிக்கைகளையும் ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.தவராசா, இலங்கைக் கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் பிரதிப் பணிப்பாளர் கெங்காதரன், சட்டத்தரணி ரி.ரெங்கன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிலையத்தில், கைத்தொழில் அபிவிருத்திச் சபையினால் நடத்தப்பட்டு வரும் சங்கானை பற்றிக் பயிற்சி நிலையம், பெறுமதி சேர்க்கப்பட்ட வேலைப்பாடுகளுடன் கூடிய சாரி பயிற்சி நிலையம், வதிரி தோற்பொருள் உற்பத்தி நிலையம், பனை அபிவிருத்திச் சபையின் உற்பத்திகள் போன்ற நிலையங்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள்  விற்பனை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .