2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

நாகர் கோயில் பகுதிக்கு சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரம்

Kogilavani   / 2013 டிசெம்பர் 28 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன்


நாகர் கோயில் பகுதியில் சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரம் ஒன்றை அமைத்து தருமாறு நாகர் கோயில் கிழக்கு, மேற்கு மீன்பிடி சங்கங்களின் சமாசங்கள் யாழ்.மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் சங்கரப்பிள்ளை ரவியிடம் கோரிக்கை விடுத்தனர்.

அதற்கு பிரதிப் பணிப்பாளர் அடுத்த வருடத்திற்குள் இப்பிரதேசத்திற்கு புதிய முன்னெச்சரிக்கை கோபுரம் ஒன்றை அமைத்து தருவதாக உறுதியளித்தார்.

மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவிலுள்ள நாகர்கோயில் பகுதியில் 'சுனாமி ஒத்திகையும் விழிப்பூட்டல்' நிகழ்வும் வெள்ளிக்கிழமை (27) நாகர் கோயில் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இதன்போதே மேற்படி கோரிக்கை விடப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில், கடந்த 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற சுனாமி அனர்த்தத்தின்; போது வடமராட்சி கிழக்கு பகுதியில் பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டதாகவும், இதனை இனிவரும் காலங்களில் தடுப்பதற்கு நாகர் கோயில் பகுதியிலும் சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரம் அமைக்கப்படவேண்டுமென்ற கோரிக்கை அந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரினாலும் ஏகமனதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதன்போது பதிலளித்த அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பிரதிப்பணிப்பாளர் ரவி,

யாழ்.மாவட்டத்திலுள்ள கரையோரப் பிரதேசங்களில் இதுவரை 5 சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரங்களினை அனர்த்த முகாமைத்துவ அமைச்சு நிறுவியுள்ளது. அடுத்த வருடம் நாகர் கோயில் பகுதியில் புதிய முன்னெச்சரிக்கை கோபுரம் ஒன்றை பெற்றுத்தருவதற்கு தாம் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

இந்நிகழ்வில் நாகர்கோயில் 551 படைப்பிரிவின் கட்டளையிடல் அதிகாரி லெப்டினன் சிறிவர்தன, கிராமசேவையாளர் செபமாலை யூட்,
அபிவிருத்தி உத்தியோகத்தர் பொன்னப்பு நந்தவர்மன், நாகர்கோயில் கிழக்கு, மேற்கு மீனவசங்க சமாச தலைவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .