2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

புதிய பிரதேச செயலாளர்கள் நியமனம்

Super User   / 2013 டிசெம்பர் 31 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன்

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பச்சிலைப்பளை மற்றும் பூநகரி ஆகிய பிரதேச செயலகங்களுக்கு புதிய பிரதேச செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, பச்சிலைப்பளை பிரதேச செயலாளராக இதுவரை காலமும் கடமையாற்றி வந்த சி.சத்தியசீலன் பூநகரி பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் உதவி மாவட்ட  செயலாளராகவும் உதவி சமுர்த்தி ஆணையாளராகவும் கடமையாற்றி வந்த பரமோதயன்  ஜெயராணி பச்சிலைப்பளை பிரதேச செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.நாளை 01ஆம் திகதி புதன்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பூநகரி பிரதேச செயலராக இதுவரை காலமும் கடமையாற்றி வந்த கே.எஸ்.வசந்தகுமார், பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சிற்கு அண்மையில் இடமாற்றப்பட்டார். இதனை தொடர்ந்தே இந்த இடமாற்றங்கள் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .