2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

கடலாமை பிடித்த இருவருக்கு சரீரப்பிணை

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 02 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

சட்டவிரோதமாக கடலாமை பிடித்த இருவரை ஒரு இலட்சம் ரூபா சரீரப்பிணையில் செல்வதற்கு  மல்லாகம் நீதிமன்ற நீதவான் அனுமதியளித்துள்ளார்.

அத்துடன்,  இவர்களிடமிருந்து  கைப்பற்றப்பட்ட கடலாமைகளை கடலினுள் விடுமாறும்  பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மல்லாகம் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் சந்தேக நபர்கள் இருவரையும் நேற்று புதன்கிழமை  ஆஜர்படுத்தியபோதே, நீதவான் மேற்படி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

மாதகல் கடற்கரையில் 02 கடலாமைகளை வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இவர்கள்  இருவரையும் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இளவாலைப் பொலிஸார் கைதுசெய்ததுடன், இவர்களிடமிருந்து 3.5 அடி மற்றும் 2.5 அடி நீளமுள்ள 02  கடலாமைகளையும் பொலிஸார் கைப்பற்றினர்.

மேலும், இந்த வழக்கை எதிர்வரும் 22ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .