2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

'ராதிகாவை பொலிஸார் கண்காணிக்கவில்லை'

Menaka Mookandi   / 2014 ஜனவரி 03 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள கனடா நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசனை பொலிஸார் கண்காணிக்கவில்லை என யாழ். தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன்சிகேரா இன்று வெள்ளிக்கிழமை (03) தெரிவித்தார்.

யாழ். தலைமைப் பொலிஸ் நிலையத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை (03) காலை 10 மணியளவில் நடைபெற்றது.

இதன்போது, 'யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள கனடா நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசனை வீட்டுக் காவலில் வைத்து விசாரணை மேற்கொள்வதற்கு சிவில் பொலிஸார் அவரை கண்காணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது' என ஊடகவியலாளர்கள் எழுப்பியுள்ள கேள்விக்கே அவர் இவ்வாறு பதிலளித்தார்.

 'சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வருகை தந்து இவர் வடமாகாணத்தின் பல்வேறு பிரதேசங்களுக்கு விஜயம் மேற்கொண்டு, பல தரப்பினரை சந்தித்து கலந்துரையாடிய போது, அதனை குடிவரவு திணைக்களத்தினர் மற்றும் பொலிஸார் கண்காணித்ததாகவும் கனடா பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது' என பத்திரிகையாளர்கள் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதற்கு அவர் பதிலளிக்கையில், அவ்வாறு பொலிஸ் கண்காணித்தாக பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டிருந்தால், மேற்படி செய்தியினை வெளியிட்ட பத்திரிகை நிறுவனத்தினையே கேட்குமாறும் அவர் பதிலளித்தார்.

  Comments - 0

  • Siva Friday, 03 January 2014 04:35 PM

    ஐயோ! இவங்க ஏன் சாதாரண விஷயத்தை பெரிசு பண்றாங்க? இவங்க கனடால போய் ஒன்னும் பண்ணப்போறதில்ல. கனடால இந்த வருஷம் தேர்தல் வரப்போகுது, அங்க இவங்க வாக்கு எடுப்பதுக்கு இங்க வந்து இப்படி பண்றாங்க...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .