2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

தெய்வத்திற்கு பயந்த திருடர்கள்

Kanagaraj   / 2014 ஜனவரி 04 , மு.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

யாழ்ப்பாணம், மல்லாகம் பெரியதம்பிரான் ஆலயத்தில் 2011  ஆம் ஆண்டு காணாமல் போன 32 பவுண் தங்க நகைகள் மூன்று வருடங்களுக்கு பின்னர் ஆலயத்திற்குள் கொண்டுவந்து நேற்று போடப்பட்டுள்ளதாக ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்தனர்.

2011 ஆம் ஆண்டு மேற்படி ஆலயத்திற்குள் நுழைந்த திருடர்கள் அங்கிருந்த 32 பவுண் தங்க நகைகளைத் திருடிச் சென்றுவிட்டதாக தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஆலயத்திற்கு நேற்றுக் காலை பூசைகளை செய்வதற்கு  சென்ற பூசகர் ஆலய உள்வீதியில் தகரப்பேணியொன்று இருந்ததை அவதானித்தார். இது தொடர்பாக ஆலய பரிபாலன சபையினரின் கவனத்திற்கு கொண்டுவந்ததையடுத்து அவர்கள் தெல்லிப்பழை பொலிஸில் முறையிட்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .