2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

6 இளைஞர்கள் மீது வாள் வெட்டு; மேலும் இருவர் கைது

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 06 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். வசாவிளான், கோணாவளைப் பகுதியிலுள்ள பிரார்த்தனை மண்டபத்திற்கு முன்பாக நின்றிருந்த இளைஞர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும்  மேலும் இருவரை  நேற்று ஞாயிற்றுக்கிழமை  மாலை (05) கைதுசெய்துள்ளதாக  அச்சுவேலி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஐ.பி.நிஷக்ங்க தெரிவித்தார்.

யாழ். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்தவர்களான தர்மலிங்கம் மாஜிந்தன் (வயது 28), பாலசிங்கம் நிஷக்ந்தன் (வயது 26) ஆகியோரே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி சந்தேக நபர்கள் இருவரையும் மல்லாகம் நீதிமன்றத்தில்  இன்று திங்கட்கிழமை ஆஜர்படுத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், மேற்படி  சந்தேக  நபர்கள் இருவரின்; வாக்குமூலப்படி இன்னும் நால்வர் இந்தச் சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளனர்.   இவர்களை கைதுசெய்யவதற்கு கோப்பாய் பொலிஸாரின் உதவி தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், மேற்படி வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய கொலனியைச் சேர்ந்த தேவராசா சிந்துஜன் (வயது 25) என்பவர் கடந்த 03ஆம் திகதி கைதுசெய்யப்பட்டார். இவரை மல்லாகம் நீதிமன்ற நீதவான் சின்னத்துரை சதீஸ்குமாரின் முன்னிலையில்  கடந்த 04ஆம் திகதி ஆஜர்படுத்தியபோது, 14 நாட்களுக்கு சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்ததார்.

கோணாவளைப் பகுதியிலுள்ள பிரார்த்தனை மண்டபத்திற்கு முன்பாக  நின்றிருந்த இளைஞர்கள் மீது கடந்த 02ஆம் திகதி  மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்களினால் மேற்படி வாள்வெட்டுச் சம்பவம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது வசாவிளான் செல்வநாயகபுரம் பகுதியியைச் சேர்ந்த அறுவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .