2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

பூசகரின் வீட்டில் திருட்டு

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 10 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். திருநெல்வேலி முத்துமாரி அம்மன் கோவில் வீதியிலுள்ள பூசகர் ஒருவரின் வீட்டிலிருந்து 30,000 ரூபா திருட்டுப்போயுள்ளதென்று அவர் நேற்று வியாழக்கிழமை முறைப்பாடு செய்துள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஸ்ரீநிக சஞ்ஜீவ ஜெயக்கொடி  தெரிவித்தார்.

கடந்த 6ஆம் திகதி கண்டிக்கு சுற்றுலாச் சென்றுவிட்டு  திரும்பிவந்து பார்த்தபோது, திருட்டுப்போனமை தெரியவந்ததாக முறைப்பாட்டில் கூறியதாகவும்  அவர் கூறினார்.

இது தொடர்பில் விரிவான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .