2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

லயன் எயாரில் பயணித்தவர்களின் உடமைகள் யாழில்

Kanagaraj   / 2014 ஜனவரி 11 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா, எஸ்.ஜெகநாதன்

இரணைதீவுக் கடலில் 1998 செப்ரெம்பர் 29 ஆம் திகதி சுட்டுவீழ்த்தப்பட்ட லயன் எயர் விமானத்திலிருந்து  மீட்கப்பட்ட 72 வகையான தடயப் பொருட்கள் யாழ்.சுப்பிரமணியம் சிறுவர் பூங்காவிற்கு முன்பாக   வைக்கப்பட்டுள்ளன.

அந்த விமானத்தில் பயணித்தவர்களை அடையாளம் காண்பதற்காகவே இந்த பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மாலை நான்கு மணிவரை இந்த பொருட்களை மக்கள் பார்வையிடலாம் என்று நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10 முதல் மாலை 4 மணிவரையும் பார்வையிடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பலாலியில் இருந்து புறப்பட்டு இரத்மலானை நோக்கிச் சென்று கொண்டிருந்த லயன் எயார் நிறுவனத்தின் அன்ரனோவ்-24 விமானம் விடுதலைப் புலிகளின் ஏவுகணைத் தாக்குதலுக்கு இலக்காகி இரணைதீவுக் கடலினுள் வீழ்ந்தது.

தொடர்ந்து அதன் பாகங்களும் பயணிகளின் உடமைகளும், பெண்ணொருவரின் அடையாள அட்டை ஆகியன கடந்த 2013 மே மாதம் 3 ஆம் திகதியிலிருந்து 5 ஆம் திகதி வரையும் நடத்தப்பட்ட மீட்பு நடவடிக்கைகளின் போது மீட்கப்பட்டன.

மீட்கப்பட்டவற்றில் மக்களின் உடைமைகள் இன்று (11) யாழ்ப்பாணத்தில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், பாணந்துறை சட்ட வைத்திய அதிகாரி பிரசன்ன தஸா நாயக்க தலைமையிலான குழுவினரால் விமானத்தில் பயணம் செய்தவர்களினை அடையாளம் காண்பதற்கான விசாரணைகள் அவர்களின் உறவினர்களிடம் இடம்பெற்று வருகின்றன.

இன்றைய விசாரணைகளின் போது விமானத்தில் பயணித்தவர்களின் உறவினர்களிடம் பெறப்படுகின்ற தகவல்கள் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்படும் என்று  என்று சட்டவைத்திய அதிகாரி பிரசன்ன தஸா நாயக்க தலைமையிலான குழுவினர் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .