2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

யாழில் வயோதிபரின் சடலம் மீட்பு

Menaka Mookandi   / 2014 ஜனவரி 20 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.நேசமணி

வட்டுக்கோட்டை - பொன்னாலை வீதியில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அருகிலிருந்து வயோதிபர் ஒருவரின் சடலம் இன்று (20) காலை மீட்கப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்தனர்.

வீதியோரமாக முகம் நிலத்துடன் முட்டும் வகையில் காணப்பட்ட  இச்சடலம், சித்தங்கேணியைச் சேர்ந்த கதிரமலை கார்த்திகேசு (வயது 51) என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இயற்கைக் கடன் கழிப்பதற்காக வீதியோரமாக சென்ற போது மாரடைப்பு ஏற்பட்டு இந்த வயோதிபர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .