2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

உள்ளூராட்சி வார பரிசளிப்பு விழாவும் கௌரவிப்பு நிகழ்வும்

Kogilavani   / 2014 ஜனவரி 22 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

நா.நவரத்தினராசா

வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் உள்ளூராட்சி வார பரிசளிப்பு விழாவும், கௌரவிப்பு நிகழ்வும் யாழ்.மருதனார்மடத்தில் அமைந்துள்ள பிரதேச சபையின் தலைமை அலுவலக கேட்போர் கூடத்தில் வியாழக்கிழமை (23) காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் தி.பிரகாஷ் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்;, இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம், உள்ளூராட்சி ஆணையாளர் ம.ஜெகு, யாழ்.பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கொ.ஐக்சில், வடமாகாண சபையின் அமைச்சர்கள், வடமாகாண சபையின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்நிகழ்வில் கடந்த ஆண்டு இடம்பெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் தமிழ் மொழி மூலம் தேசியமட்டத்தில் முதலாம் இடத்தினைப் பெற்ற வலி.பிரதேச சபைக்கு உட்பட்ட மாணவன் ம.தனுராஜ், பிரதேச சபையின் தலைமையகம் அமைப்பதற்கு காணி அன்பளிப்பச் செய்த கொடையாளி மு.பொ.நல்லதம்பி, க.பொ.த உயர்தரத்தில் மூன்று 'ஏ' சித்திகளை பெற்ற வாழ்வக மாணவன் ஒருவன் ஆகியோரும் கௌரவிக்கப்பட்வுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .