2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

வாழைக்குலைகளை வெட்டியவர் மடக்கி பிடிப்பு

Kogilavani   / 2014 ஜனவரி 22 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். புத்தூர் எல்லாளன் நூலகத்திற்கு அருகிலுள்ள வாழைத்தோட்டத்தில் வாழைக்குலைகளை வெட்டிக்கொண்டிருந்த ஆவரங்கால் மேற்கைச்சேர்ந்த இராசரத்தினம் திலீபன் (வயது -23) என்பவரை புதன்கிழமை அதிகாலை கைதுசெய்துள்ளதாக அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெ.எ.எஸ்.என்.கே.ஜெயசிங்க தெரிவித்தார்.

பல திருட்டுச் சம்பங்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் மேற்படி நபர், அதிகாலை வேளையில் வாழைக்குலைகளை வெட்டிகொண்டிருந்ததை அவதானித்த பொதுமக்கள் அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்ததுடன் அவரை மடக்கி பிடித்து மின்கம்பத்தில் கட்டி வைத்துள்ளனர்.

இந்நபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .