2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

அமெரிக்காவில் இருந்து ஜப்பானுக்கு புறப்பட்டார் ஜனாதிபதி அனுர

Editorial   / 2025 செப்டெம்பர் 26 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க விஜயத்தை  நிறைவு செய்த ஜனாதிபதி ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தைத்  ஆரம்பித்தார்

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட   ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, தனது விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து    25 ஆம் திகதி இரவு ஜோன் எஃப். கெனடி சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஜப்பானுக்குப்  பயணமானார்.

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி செப்டம்பர் 27 முதல் 30 ஆம்  திகதி வரை ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை  மேற்கொள்கிறார்.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுடன்  வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரதும் இந்த விஜயத்தில் இணைந்து கொள்கிறார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .