2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

3 வாகனங்கள் மோதியதில் 11 பேர் காயம்

Editorial   / 2025 செப்டெம்பர் 26 , பி.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

பண்டாரகம-களுத்துறை வீதியில் லொறி, வேன் மற்றும் முச்சக்கர வண்டி மோதியதில் 11 பேர் காயமடைந்துள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவிக்கின்றனர். காயமடைந்தவர்கள் நடனக் குழுவைச் சேர்ந்தவர்கள்.

மொரந்துடுவவிலிருந்து பயணித்த லொறி பண்டாரகமவை நெருங்கிக்கொண்டிருந்தபோது, ​​எதிர் திசையில் இருந்து வந்த முச்சக்கர வண்டி ஒன்று வீதியைக்  கடந்து லொறியுடன் மோதியது. லொறி ஓட்டுநர் பிரேக் போட்டதால் லொறியின் பின்னால் வந்த வேன் லொறியுடன் மோதி   விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காயமடைந்தவர்கள் பண்டாரகம மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பண்டாரகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .