2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

சமூகங்களை வலுப்படுத்த அமெரிக்க அரசாங்கம் உதவி

Super User   / 2014 ஜனவரி 23 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


கொழும்பிலுள்ள ஐக்கிய அமெரிக்க தூதரகம் அதன் யூஎஸ்எயிட் நிறுவனத்தின் ஊடாக யாழ்ப்பாணம் மருதங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த மீனவ சமூகத்தினரை வலுப்படுத்தும் புதிய நிகழ்ச்சித் திட்டமொன்றை இன்று அறிவித்துள்ளது.

வடக்கில் உள்ள இடம்பெயர்ந்த பல குடும்பங்களை நிரந்தரமாக மீள்குடியேற்றும் முயற்சிகளை துரிதப்படுத்தல் மற்றும் பொருளாதார வாய்ப்புக்களை வலுப்படுத்துதல் ஆகியற்றை நோக்காகக் கொண்ட யூஎஸ்எயிட்டின் முன்முயற்சியின் ஒரு பாகமாகவே 1.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான இந்த வாழ்வாதாரத் திட்டம் அமைந்துள்ளது.

'எண்ணற்ற இடப்பெயர்வுகள் காரணமாக இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள்; தமது வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதில் மீண்டும் மீண்டுமாக நெருக்கடிகளை எதிர்நோக்கியமையை நாம் அறிவோம் என ஆரம்ப வைபவத்தில் உரையாற்றிய இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிஸேல் சிஸன் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

"அமெரிக்க அரசாங்கம் உங்கள் அனைவருடனும் கைகோர்த்து மக்;களின் வாழ்வாதாரத்தை மீள நிலைநிறுத்த உதவுவதில் அர்ப்பணிப்புக் கொண்டுள்ளது.  படகுகளையும் மீன்பிடி வலைகளையும் வழங்குவதனூடாக இந்த சமூகத்தை சேர்ந்த 200ற்கு மேற்பட்ட மீனவக் குடும்பங்களுக்கு நன்மை கிட்டும்" என்றார்.

இந்த வைபவத்தில் தூதுவருடன் வடமாகாண மீன்பிடி மற்றும் விவசாய அமைச்சின் செயலாளர் ஆர்.வரதீஸ்வரனும்; கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சித்திட்டத்தினூடாக மருதங்கேணி பிரதேசத்தை தாண்டி வட மாகாணத்திலுள்ள 2,775 நேரடிப் பயனாளிகள் உதவிகளைப் பெற்றுக்கொள்வர்.

'சேவா லங்காவுடன்' இணைந்து மேற்கொள்ளப்படும் இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக விவசாயிகளது வாழ்வாதார நிலையை மேம்படுத்துதல்இ அடிப்படை ஊட்டச்சத்து மற்றும் உணவு பாதுகாப்பை வலுப்படுத்துதல் மற்றும் இடைமாற்று குடியிருப்புக்களையும் பாதுகாப்பான குடிநீர் கிணறுகளையும் வழங்குதல் ஆகியனவும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .