2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

பருத்தித்துறையில் பாடசாலை மாணவி சடலமாக மீட்பு

Kogilavani   / 2014 ஜனவரி 24 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.நேசமணி

பருத்தித்துறை, மாதனையைச் சேர்ந்த முருகதாஸ் பத்மபிரியா (13) என்ற பாடசாலை மாணவி வியாழக்கிழமை (23) மாலை அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

இவரது பெற்றோர்கள் வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பிய வேளை மகள் சடலமாக இருப்பதினை அவதானித்துள்ளதுடன் அது தொடர்பில் பொலிஸாருக்க தகவல் கொடுத்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தினை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைத்துள்ளனர்.

பருத்தித்துறையிலுள்ள பிரபல பாடசாலையில் இவர் தரம் - 8 இல் கல்விகற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .