2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

கடலாமை பிடித்தவருக்கு சரீரப்பிணை

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 26 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். மாதகல் கடலில் கடலாமை ஒன்றைப்  பிடித்து படகின் கீழ் மறைத்து வைத்திருந்தததாகக் கூறப்படும் சின்னத்தம்பி யோகநாதன் (வயது 50) என்பவரை 50,000 ரூபா சரீரப்பிணையில் யாழ். மல்லாகம் மாவட்ட நீதிமன்ற நீதவான் பஷிர் மொஹமட் விடுவித்தார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை (26) நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே அவர் சந்தேக நபரை சரீரப்பிணையில் விடுவித்தார்.  

இது தொடர்பில் கிடைத்த தகவலைத் தொடர்ந்து  அங்கு சென்று உயிருடன் 3 அடி நீளமான கடலாமையுடன் மாதகலைச் சேர்ந்த இந்தச் சந்தேக
நபரை நேற்று சனிக்கிழமை  (25) கைதுசெய்ததாக இளவாலை பொலிஸார் தெரிவித்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .