2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

துவிச்சக்கரவண்டி திருட முற்பட்டவர் பொதுமக்களினால் மடக்கிப் பிடிப்பு

A.P.Mathan   / 2014 ஜனவரி 27 , பி.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
-சுமித்தி தங்கராசா
 
யாழ். பிரதேச செயலகத்தில் துவிச்சக்கரவண்டி திருட முற்பட்ட நபர் ஒருவரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து, யாழ். குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் இன்று (27) ஒப்படைத்துள்ளனர்.
 
யாழ். கொய்யாத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த குறித்த நபர், இன்று காலை யாழ். பிரதேச செயலகத்திற்கு சென்று அங்கிருந்த துவிச்சக்கரவண்டியின் பூட்டினை உடைத்து திருட முற்பட்டுள்ளார்.
 
இதனை அங்கிருந்து அவதானித்த பொதுமக்கள், அவரை மடக்கிப் பிடித்து யாழ். குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
 
மேற்படி நபரை யாழ். நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக யாழ். சிறு குற்றத்தடுப்பு பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .